தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே கொட்டக்கொம்பு மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது. கருப்பண்ணசாமிக்கு பொங்கல் வைத்து கிடா பலியிடல் நடந்தது. மலைவாழ் சமுதாயத்தினர் முன்னோர்கள் வனதேவதை வழிபாடு முறை குறித்து இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பது. பரிவார தெய்வங்களை வணங்கும் நிகழ்வுகள் நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது.