பதிவு செய்த நாள்
01
ஆக
2018
12:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 91 லட்சம் ரூபாய் இருந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். பவுர்ணமி முடிந்த நிலையில், நேற்று, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 91 லட்சத்து, 10 ஆயிரத்து, 372 ரூபாய், 168 கிராம் தங்கம், 720 கிராம் வெள்ளி, ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.