பதிவு செய்த நாள்
01
ஆக
2018
12:08
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், தச மஹாவித்யா யாகம் மற்றும், 10 ஆயிரத்து, எட்டு ஜபம் நேற்று நடந்தது. முரளிதர சுவாமிகள் துவக்கி வைத்தார். பெண்களின் சக்தியை உணர்த்தும் காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா ஆகிய தேவிகளுக்கு, 46 வேதவிற்பனர்கள் பங்கேற்று, யாகம் செய்தனர். தொடர்ந்து, நவாவர்ண பூஜை, ராகு, கேது, ப்ரீதி ஹோமம், சாந்தி ஹோமம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.