பதிவு செய்த நாள்
06
ஆக
2018
02:08
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தியாகராஜா சுவாமிகள் ஆராதனை இசை விழா நடந்தது. பொள்ளாச்சி ஸ்ரீ தியாகராஜா சுவாமிகள் நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில், 25ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் ஆராதனை இசை விழா, சக்தி திருமண மண்டபத்தில் நடந்தது. கணபதி ேஹாமத்துடன், விழா துவங்கியது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து, தியாகராஜா சுவாமி உருவப்படத்துடன், இசை கலைஞர்கள் ஊர்வலமாக மண்டபத்துக்கு வந்தனர். சங்க தலைவர் சாருகேசவன், செயலாளர் சுந்தரம், பொருளாளர் சிவராஜ் முன்னிலை வகித்தனர். மங்கள இசை, ஸ்ரீ ராகவேந்திரா இசைப்பள்ளி மாணவியரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கேரளா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.தொடர்ந்து, இசை கலைஞர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. மாலையில், சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும்; ஆஞ்சநேயர் உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.i festival