செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2012 12:01
செங்கோட்டை : செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செங்கோட்டையில் பிரசித்தி பெற்று விளங்கும் தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி கோயில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் பிப்.6ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு விசேஷ பூஜை, அலங்காரம் மற்றும் திருவீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், தைப்பூச திருவிழா மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.