ஆழ்வார்குறிச்சி : கீழக்கடையம் பத்திரகாளியம்மன் கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கீழக்கடையத்தில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலக்கோயில் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ளது. நேற்று இக்கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவில் கணபதி ஹோமம், வேதபாராயணம், கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை சுந்தரபட்டர், சுப்பிரமணியம், தில்லை விநாயகம் நடத்தினர். பின்னர் விமான அபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகமும், விசேஷ பூஜையும் நடந்தது.