பதிவு செய்த நாள்
30
ஜன
2012
12:01
வீரவநல்லூர் : திருப்புடைமருதூர் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது. பொருணை ஆறும், கடனா நதியும் சங்கமித்து தாமிரபரணி வடக்கு நோக்கி பாயும் தட்ஷிணகாசி என்ற சிறப்புடைய திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் அர்ச்சகர் மகாராஜாபட்டர் கொடியேற்றினார். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வெளிப்பிரகார உலா நடந்தது. நிகழ்ச்சியில் பாப்பாக்குடி பஞ்., யூனியன் ஒன்றியக்குழு தலைவர் கிரிஜா, துணைத் தலைவர் தளபதி ராம்குமார், கோயில் நிர்வாக அதிகாரி அஜீத், பஞ்.,தலைவர் முத்து அய்யப்பன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுடலைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் பிப்.6ம் தேதி தேரோட்டமும், 7ம் தேதி மதியம் 1 மணிக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பையா முன்னிலையில் தைப்பூச தீர்த்தவாரி நடக்கிறது.