பதிவு செய்த நாள்
30
ஜன
2012
12:01
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து, பெரியூர் புதுக்கலையனூர் மாகாளியம்மன் கோவில், இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேக பணி கடந்த 9 ஆண்டாக நடத்தப்பட்டு, கோவில் நுழைவாயில் ராஜகோபுரம் கட்டி பணிகள் முடிந்தது.இதற்கான கும்பாபிஷேகம் பூஜைகள், கடந்த 26ம் தேதி மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 8.15 மணிக்கு கோபுரகலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் பங்கேற்று, மாகாளியம்மனை தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம் தவளகிளி தண்டாயுதபாணி சுவாமி குருக்கள் ராம்கோடிசிவாச்சாரியார் தலைமையில் நடந்த இந்த கும்பாபிஷேகத்துக்கு பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் செல்வம், சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில் வகையற முன்னாள் அறங்காவல் குழு தலைவர் பொன்னுசாமி, பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் துணை தலைவர் மணிவேல், ஆலையின் பி.ஆர்.ஓ., குழந்தைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.கோவிலில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் ரமணிகாந்தன் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.