கரூர்: கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு மவுன குரு ஜீவசித்தர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர். பிரசித்தி பெற்ற நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மவுன குரு சித்தர் கோவில் 30 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. பதினெட்டு சித்தர்கள் திருவுருவுடன் கோபுரம் எழுப்பபட்டுள்ள கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த 19 ம் தேதி முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.நேற்று அதிகாலை 5 மணி முதல் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மஹா கும்பாபிஷேம் நடந்தது. தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.