பதிவு செய்த நாள்
11
ஆக
2018
03:08
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள, பச்சையம்மன் கோவில் ஆண்டு விழாவில், கும்ப பூஜை, பூர்த்தி ?ஹாமம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, வேள்வி பூஜை நடந்தது. பச்சையம்மன் உற்சவருக்கு, பெண்களால் பாலபி?ஷகம் செய்யப்பட்டது. 11:00 மணிக்கு, 16 வகையான ஆராதனைகள், பூர்த்தி ?ஹாமம், கும்ப பூஜை நடந்தது. நேற்று இரவு, 7:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில்களில், நேற்று அதிகாலை முதல், சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, சென்னை சாலையில் உள்ள, பெரிய மாரியம்மன் கோவிலில், காய்கறி அலங்காரத்தில், பக்தர்களுக்கு, அம்மன் அருள்பாலித்தார்.
* ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள, முத்து மாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மேலும், அக்ரஹாரம் அம்பா பவானி அம்மன் கோவிலில், பவானி அம்மனுக்கு அபி?ஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில், கிராம தேவதை பட்டாளம்மன் கோவிலில், தீச்சட்டி, கஞ்சிக் கலயம், பால்குட ஊர்வலம், ஆடி அமாவாசை சிறப்பு பூஜை, நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. பக்தர்கள், தீச்சட்டி, கஞ்சிக் கலயம், பால்குடம் ஆகியவற்றை ஊர்வலமாக சுமந்து சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு அபி?ஷகம், 10:00 மணிக்கு துர்கா தேவி ஹோமம், மாலை, 5:00 மணிக்கு தேர்வீதியில் அம்மன் ஊர்வலம், 6:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், குங்கும பூஜை, விளக்கு பூஜை, 7:00 மணிக்கு, மகா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.