காரைக்குடி : காரைக்குடி செக்காலை சகாய அன்னை ஆலய விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு பாதிரியார் எட்வின்ராயன் கொடி ஏற்றினார். முன்னதாக ஆலயத்தை சுற்றிலும் கொடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பாதிரியார்கள் எட்வின்ராயன், ஒனாசியஸ் பிரபாகரன் தலைமையில் திருப்பலி நடந்தது. தேவகோட்டை மறை வட்ட அதிபர் பாஸ்கரன் மறையுரை ஆற்றினார். விழா நாட்களில் மாலை 5:30 மணிக்கு திருச்ஜெபமாலையும், 6:00 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. ஞாயிறு திருப்பலி நற்கருணை விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி நடக்கிறது. 18-ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலியும், தேர்பவனி, நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 19-ம் தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.