Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் ... ஆடி அமாவாசையையொட்டி நெரூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடிப்பாக்கம் சீதளாதேவி கோவிலில் ஆடி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
01:08

மடிப்பாக்கம்:மடிப்பாக்கம், சீதளா தேவி கோவிலில், இன்று ஆடி திருவிழா கோலாகலமாக நடக்க உள்ளது.சென்னை, மடிப்பாக்கம், குபேரன் நகர் விரிவு பகுதியில் ஸ்ரீ மகா சக்தி சீதளாதேவி கோவில்உள்ளது. பார்வதி தேவியின் அவதாரமாக, சீதளா தேவிக்கான கோவில்,  2002ம் ஆண்டு குருஜி ராகவனால் நிர்மாணிக்கப்பட்டது. அவரே அக்கோவிலின் தலைமை அர்ச்சகராகவும் உள்ளார்.இக்கோவிலின் வடக்கு திசை நோக்கி, சீதளா அம்மன் அருள் பாலிக்கிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், 11வது ஆடித் திருவிழா இன்று  நடக்கிறது.காலை, 8:00 மணிக்கு மடிப்பாக்கம், காஞ்சி, காமாட்சி நகர் மெயின் ரோட்டில் உள்ள, லட்சுமி கணபதி கோவில் இருந்து, சீதளா சித்தர் தலைமையில், 108 பால்குட வைபவம் துவங்குகிறது.

அதைத்தொடர்ந்து, சீதளா தேவிக்கு, 17 வகையான திரவியங்களால் விசேஷ அபிஷேகமும், பால் குட அபிஷேகமும் நடக்கிறது. பிற்பகல், 12:00 மணிக்கு கூழ் படைத்தல் நிகழ்ச்சியும், அருளாட்டம், மகா தீபாராதனை, அருளாசி நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு, மூலவர்  சீதளாதேவிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வீதி உலா துவங்குகிறது. இரவு, 10:00 மணிக்கு தோள் குலுங்க அருளாட்டம், மங்கள ஆரத்தியுடன் நிறைவு பெறுகிறது. இரவு, 7:00 மணிமுதல், மடிப்பாக்கம், ஹரிஹரன் குழுவினரின்  பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar