மங்கலம்பேட்டை: மு.பரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11:30 மணியளவில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கும், ஆண்டாள் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.