காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் உடையார்குடி மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேர் திருவிழா நடந்தது. கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 11ம் தேதி திருக்கல்யாணமும், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலமும்; நேற்று 13ம் தேதி தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி, காலை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று நடைபெற உள்ளது.