பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
திருவொற்றியூர்: திருவொற்றியூர், கார்கில் வெற்றி நகரில் உள்ள, அன்னபூரணி சமேத ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவிலின், 14ம் ஆண்டு ஆடி மாத திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான, தீமிதித்தல் நிகழ்வு, நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சத்தியமூர்த்தி நகரில் இருந்து ராட்சத அலகுகள், கூண்டு வேல் அணிந்தும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், ஊர்வலமாக வந்து, தீமிதித்து, நேர்த்திக் கடனை செலுத்தினர். இவ்விழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, 308 திருவிளக்கு பூஜை; நாளை, கருப்பசாமி பூஜையுடன் விழா நிறைவு பெறும்.