பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
மேல்மருவத்துார்,: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூர விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடிப்பூர விழாவை யொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று முன்தினம், கஞ்சி வார்த்து படைத்தனர். அதைத் தொடர்ந்து, பாலாபிஷேக விழாவை, பங்காரு அடிகளார், நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, சுயம்பு அம்மனுக்கு, பாலாபிஷேகம் செய்து துவக்கி வைத்தார். அதன் பின், பக்தர்களை கோவிலுக்கு, அனுமதிக்கப்பட்டனர்.நேற்று காலை, 5:15 மணிக்கு, பங்காரு அடிகளாருக்கு, பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர், நமச்சிவாயம் மற்றும் பா.ஜ., அகில இந்திய மகளிர் அணி, தேசிய செயற்குழு உறுப்பினர் அருணா தேவி, மாநில செயலர் மீனாட்சி உட்பட பிரமுகர்கள், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலை, 4:45 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, விழா நிறைவு பெற்றது. இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சித்தர் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர்.