ஆண்டிபட்டி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் வளையல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் வளையல்களை அம்மனுக்கு அணிவித்து பூஜைகள் செய்தனர். பலவகை கனிகளை படையல் செய்து வழிபாடு செய்தனர்.
*ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோயிலில் பெண்கள் அம்மன் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்தனர். அம்மனுக்கு வளையல் அணிவித்து, கர்ப்பிணிகளுக்கு அணிவிக்கப்பட்டது. பல வகை சாதங்கள் அம்மனுக்கு படையல் செய்து வழிபட்டனர்.---------