பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 25 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய் இருந்தது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், இரு மாதங்களுக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். ஆடிக்குண்டம் விழாவுக்குபின், உண்டியல் காணிக்கை கோவிலில் நேற்று எண்ணப்பட்டது. மொத்தமுள்ள, 20 உண்டியல்களில் இருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. பண்ணாரி அம்மன் கோவில் துணை கமிஷனர் பழனிகுமார் தலைமையில், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் ஆய்வாளர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. மேட்டுப்பாளையம் வி.என்.கே., மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவியர், வெல்ஸ்புரம் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். தங்கம், 134 கிராம், வெள்ளி, 198 கிராம், ரொக்கமாக, 25 லட்சத்து, 15 ஆயிரத்து, 163 ரூபாய் இருந்தது.