திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலில், இரு அணையா விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. தாழக்கோவிலாக, பக்தவத்சலேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கு, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தீப விளக்குகள் ஏற்றுவதில், அறநிலையத் துறை நிர்வாகம் கட்டுப்பாடுகள்விதித்துள்ளது. இதனால், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சிறிய தேர் வடிவமைப்பில், பக்தவத்சலேஸ்வரர் சன்னதி மற்றும் திரிபுர சன்னதி முன், விளக்குகள் உள்ளன.விளக்கில் பொருத்தியுள்ள குழாய் வழியாக எண்ணெய் மட்டும் ஊற்றலாம்; தீபம் அணையாமல் ஒளிரும்.