சிங்கவரம் ரங்கநாதர் கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறையினர் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2012 11:01
செஞ்சி : செஞ்சியில் இருந்த சிங்கவரம் ரங்கநாதர் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் கண்டறிந்து, கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். செஞ்சியில் அரசு புறம்போக்கு இடம் மற்றும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 25ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையினர் துரிதமாக களம் இறங்கி உள்ளனர். முதல் கட்டமாக செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு வடமேற்கில் இருந்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 40.5 சென்ட் இடத்தை கண்டறிந்துள்ளனர். இதில் அந்நியர்கள் பிரவேசிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். என்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இதே போல் போல் செஞ்சியில் உள்ள மற்ற கோவில் நிலங்களையும் மீட்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.