கடலூர் : கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ள அஸ்திர தேவர் சாமிக்கு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தை மாதம் 1ம் தேதி உத்திராயன புண்ணியகாலம் துவங்குகிறது. அன்றைய தினம் ‹ரியன் வடக்கு திசை நோக்கி வருவதாக ஐதீகம். இருப்பினும், தை மாதம் அமாவாசை முடிந்து ரத சப்தமி எனப்படும் 7ம் நாளான அன்றைய தினத்தில் தான் ‹ரியன் முறையாக வடக்கு நோக்கி வருவதாக ஐதீகம். இதனை யொட்டி கடலூர், பாடலீஸ்வரர் கோவில் உள்ள அஸ்திர தேவர் சாமிக்கு, பெண்ணையாற்றில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜெகன் நாதன், செயலர் அலுவலர் மேனகா மற்றும் அர்ச்சர்கள் செய்திருந்தனர்.