பதிவு செய்த நாள்
31
ஜன
2012
11:01
தர்மபுரி: தர்மபுரி சத்யா நகர் சுந்தர சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 28ம் தேதி நடந்த கணபதி பூஜைக்கு வேளாண் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். திருப்பணிக்குழு தலைவர் தியாகராஜன் வரவேற்றார். ராமுலு முன்னிலை வகித்தார். புதிய மண்டபத்தை தடங்கம் பஞ்சாயத்து தலைவர் சிவலிங்கம் திறந்து வைத்தார். ராணி சிவலிங்கம் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து கணபதி பூஜை, கணபதி ஹோமம், அனுக்ஞை, புண்யாகம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, திரவியாஹுதி, பூர்ணா ஹுதி, தீபாராதனை நடந்தது. மாலை ஊர் அழைப்பு, முளைப்பாரி நகர்வலம், வரவேற்பு நடந்தது. மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், பஞ்ச கவ்யம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பிரவேஷபலி, அங்குரார்ப்பணம், ரஷா பந்தனம், கும்ப அலங்காரம், கும்பஸ்தானம், கலசங்கள், யாகசாலைப்பிரவேசம், முதல் கால வேள்வி, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் சுந்தர சித்தி விநாயகருக்கு யத்திரஸ்தாமபிதம், அஷ்டபந்தனம் சாத்துதல், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹுதி, நாடி சந்தானம், ஸ்பர்சாஹுதி, மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பட்டு கும்ப ஸ்திர லக்னத்தில் விநாயகர் விமானம் மற்றும் மூலவருக்கு மஹா கும்பாபிஷேகம், தசதானம், தசதரிசனம், அலங்காரம், அர்ச்சனை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. சென்னை நங்கநல்லூர் ஸ்ரீலஸ்ரீகாமாட்சி சுவாமிகள் மற்றும் தர்மபுரி அதகப்பாடி அங்காளம்மன் சிம்ம பீடம் மாதார சரஸ்வதி அம்மையார் ஆகியோர் அருளாசி வழங்கினர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தடங்கம் பஞ்சாயத்து தலைவர் சிவலிங்கம், ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து தலைவர் சரவணன், அப்பாவு நகர் ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்க அய்யாராஜ், பச்சமுத்து கல்வி நிறுனவனங்களில் தலைவர் பாஸ்கரன், தொழில் அதிபர்கள் மணிவண்ணன், இளங்கோவன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்து, முன்னாள் யூனியன் சேர்மன் சுப்பிரமணி, தொழில் அதிபர் பவுன்ராஜ், பஞ்சாயத்து துணை தலைவர் தமிழரசு, பெரியசாமி, சங்கரன், பஞ்சாட்சரம், நடேசன், துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.