பதிவு செய்த நாள்
31
ஜன
2012
11:01
ஆழ்வார்குறிச்சி : கடையம் முப்புடாதியம்மன் கோயிலில் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடையம் வடக்கு ரதவீதியில் முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 200 அடிக்கு மேலான மிகப்பெரிய ஓட்டு கொட்டகையை 1932ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி பொதுமக்கள் அமைத்துள்ளனர். சுமார் 80 ஆண்டு காலமாக இந்த கொட்டகை மாற்றப்படாத நிலையில் இருப்பதால் கோயில் மற்றும் பொதுமக்கள் வசதி கருதி இதனை மாற்றியமைப்பதற்காக கொடை விழா மண்டகபடிதாரர்கள் முன்னிலையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் மண்டகபடிதாரர்கள், வரிதாரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஓட்டு கொட்டகையை மாற்றி நிரந்தர சென்ட்ரிங் கட்டடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பணிநிறைவு நல்லாசிரியர் மீனாட்சிசுந்தரம் தலைவராகவும், இலஞ்சி ஆர்.பி.மேல்நிலைப்பள்ளி பணிநிறைவு தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் செயலாளராகவும், சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி பணிநிறைவு தலைமையாசிரியர் ராமன் இணை செயலாளராகவும், கடையம் லயன்ஸ் சங்க தலைவர் முருகன் பொருளாளராகவும், கடையம் பஞ்.,தலைவர் சண்முகம், பத்திரிகையாளர் சண்முகம் துணைத் தலைவர்களாகவும், புவனா, விஏஓ முருகன், காளிச்செல்வன், ராமச்சந்திரன், முருகன், இந்திராணி, சந்திரன், அம்பலவாணன், அழகுசுந்தரம், ராஜேந்திரன், மோகன், கோபால், சங்கரன், கல்யாணி, முருகன், எல்லப்பன், கவுன்சிலர் மகாலிங்கம், பட்டமுத்து, செல்வகணேசன், கார்த்திகேயன், பழனி, கடையம் பஞ்., துணைத் தலைவர் பூலோகப்பாண்டியன், திலகராஜ் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.