* ஒரு லட்சியத்தை ஏற்றுக்கொண்ட பிறகு துன்பம் குறுக்கிட்டாலும் வெற்றி வரும் வரை முயற்சியைத் தொடருங்கள். * ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கடவுளை நினைத்து உருகினால் நிச்சயமாக அவரருள் கிடைக்கும். * முழு நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகியவையே வெற்றிக்கான வழிகள். * உயிர் வாழ உணவு போல சுதந்திரமாக வாழ தியாகம் அவசியம். * சுதந்திரம் இல்லாத தேசம் உயிர் இல்லாத உடம்பை போன்றது. அரசியல் தந்தை போன்றது, தர்மம் தாய் போன்றது. இரண்டும் இணைந்திருப்பதே நல்லறம். * சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ கேலியாக சிரித்தால் உன்னைப் பார்த்து இறைவன் கேலியாக சிரிப்பான். * கஷ்டங்களை விரும்பி அனுபவிக்க வேண்டும். அப்போது தான் சுகத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும். * கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நம் சொந்த வாழ்விலும், சமுதாய வாழ்விலும் முன்னேற முடியாது. * பிழைகளை சரி செய்து கொள்வதில் தயக்கம் இருந்தால் வாழ்வில் வளர முடியாது. வழிகாட்டுகிறார் ராஜாஜி