பதிவு செய்த நாள்
23
ஆக
2018
01:08
முத்தியால்பேட்டை : முத்தியால்பேட்டை மூலஸ்தம்மனுக்கு, இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை கீழ்தெருவில், மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை, வாழ்முனி நாயக்கர் - மீனாட்சியம்மாள் குடும்பத்தினர், சிறியளவில் கட்டி, வழிபட்டு வந்தனர். அதே கோவிலை, ஆர்.வி.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் பெரிய அளவில் கட்டி முடித்துள்ளனர். இதன் கும்பாபிஷேகம், இன்று காலை, 9:30 முதல், 11:00 மணிக்குள் நடைபெற உள்ளது.இந்த விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்க இருப்பதால், கூடுதல் போலீசாரை, காவல் துறை நிர்வாகம் நியமித்துள்ளது.