ராஜபாளையம்: ராஜபாளையம் அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொண்டாடப்பட்டது. கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம், அன்னதானம் நடந்தது. இரவில் உண்ணாமலை அம்மாளுக்கும் அருணாச்சல ஈஸ்வரர்க்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர். ஏற்பாடுகளை இல்லத்துபிள்ளைமார் சமூகத்தினர்செய்திருந்தனர்.