அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலவநத்தம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி விஷ்வரூப தரிசனம், கோபூஜை, விஷ்வசேணர் அராதணம் புண்யாகவஜனம், நித்தியஹோமம், மூலமந்திரஹோமம், பூர்ணஹீதி வேதவிண்ணப்பம், யாத்திராதானம் ,கடம் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து 16 அடி 1 இஞ்ச் உயரமான ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சிலைக்கு பிரதிஷ்டை பூஜை செய்தனர். அதன்பின் காலை 11:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.