பதிவு செய்த நாள்
24
ஆக
2018
12:08
பல்லடம்: ப.வடுகபாளையத்தில் உள்ள மகா முனீஸ்வரன் கோவில், பொங்கல் விழா கோலாகலமாக நடந்து வருகி றது. முன்னதாக, 7ம் தேதி, பொங்கல் பூச்சாட்டுதல், அபிஷேகம் பூஜைகளும், கன்னிமார் அம்மன் கண் திறப்பு, மற்றும் பொங்கல் படைத்தல், உருவாரம் எடுத்து வருதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று, மஞ்சள் நீராட்டு விழாவுடன், சுவாமி திருவீதி உலா நடந்தது திரளான பக்தர்கள் பங்கேற்று, முனீஸ்வரனுக்கு ஆடு, கோழி, பன்றி பலி கொடுத்து, நேர்த்தி கடன் செலுத்தினர்.