பதிவு செய்த நாள்
24
ஆக
2018
12:08
கோவை:காட்டூர், மாரியப்பன் கோவில் வீதியில் உள்ள கருப்பராயர் முனியப்பர், தன்னாசியப்பர் கன்னிமார் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. கோவிலில், விமானப்பணிகள் முடிவுற்று, விநாயகர் ஆலயம் நிறுவப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூலை, 22ம் தேதி, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி நிலத்தேவர் வழிபாடு, விமானஸ்துாபி பிரதிஸ்டை, முதலாம் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று, காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை, 10:00 மணிக்கு கலசங்கள் எழுந்தருளல் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து, காலை, 10:15 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகம், மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தன. காலை, 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.