பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, குண்டல்பட்டியில் உள்ள பச்சையம்மன் கோவிலில், நேற்று கும்பாபி ?ஷக விழா நடந்தது. தர்மபுரி அடுத்த குண்டல்பட்டியில் உள்ள இக்கோவிலில், கடந்த, 22ல் காலை, 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை மஹா சங்கல்பம், தனபூஜை, மஹா கணபதி ஹோமம், அஷ்ட லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமங்கள் நடந்தன. 23ல் காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. முக்கிய நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபி ?ஷகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு பச்சையம்மன், மன்னாரீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.