திருப்போரூர் : திருப்போரூர் கிருஷ்ணர் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. திருப்போரூர் கிரிவலப்பாதையில், கிருஷ்ணர் கோவில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடந்தது. கும்பாபிஷேக நிறைவு ஓராண்டை ஒட்டி, வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. 7:00 மணிக்கு, 51 கலச பூஜைகள், 8:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கிருஷ்ணரை வழிபட்டனர்.