கமுதி: கமுதி முப்பிடாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கமுதி கண்ணார்பட்டி முப்பிடாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 16 ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜை, கலைநிகழ்சிகள் நடத்தப்பட்டது. திருவிழாவின் கோவில் வளாகத்தில் 21 நாட்களாக வளர்க்கப்பட்ட முளைப்பாரியை அம்மனுக்கு படைத்து, நாட்டுப்புற பாடலுடன் கும்மி அடித்து வழிபட்டு, அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து சென்று குண்டாற்றில் கரைத்தனர்.