பதிவு செய்த நாள்
28
ஆக
2018
04:08
* ஆகஸ்ட் 25 ஆவணி 9: ஓணம் பண்டிகை, ரிக் உபா கர்மம், சிவன் கோயில்களில் நடராஜர் அபிஷேகம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சட்டத்தேரில் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 26 ஆவணி 10: பவுர்ணமி விரதம், யஜுர் உபாகர்மம், ஆவணி அவிட்டம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ரிஷப வாகனம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் பவனி, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் பூப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்
குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
*ஆகஸ்ட் 27 ஆவணி 11: காயத்ரி ஜபம், குறுக்குத்துறை முருகன் தெப்பம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.
* ஆகஸ்ட் 28 ஆவணி 12: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 29 ஆவணி 13: முகூர்த்த நாள், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் பவனி, திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 30 ஆவணி 14: முகூர்த்தநாள், மகா சங்கடஹர சதுர்த்தி விரதம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா ஆரம்பம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு, ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் முருகன் திருவிழா ஆரம்பம்.
* ஆகஸ்ட் 31 ஆவணி 15: திருச்செந்தூர் முருகன் சிங்க கேடய சப்பரம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் ஊஞ்சல் சேவை, ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் முருகன் பவனி.