இறைவனுக்கு அபிஷேகம் நிறைவுற்றவுடன் நிவேதனம் செய்து நீராஞ்சனம் காண்பித்து அதன் பின் சுவாமியின் திருமேனியை நன்கு உலர்ந்த வெள்ளை துணியால் துடைத்தல் வேண்டும். அதுவும் சுவாமியின் ஆவுடையார் முகத்தை பசுவை தடவிக்கொடுப்பதுபோல் இதமாக தடவி துடைத்தல் வேண்டும். இவ்வாறு இறைவன் திருமேனியை துடைக்கும் ஆடைக்கு திருவொற்றாடை என்று பெயர். இவ்வாறு இறைவன் துணிகளை சுத்தம் செய்து தருவதற்காக சிலகுடும்பங்களும், அவர்களுக்கு சுய உரிமைக் கொண்ட ஊழிய மானியமும் நம் மன்னர்களால் வழக்கப்பட்டிருந்தது.இவ்வாறு வழங்கப்பட்ட மானியத்திற்க்கு சுத்தகாணி என்று பெயர் என பெரியோர் கூறுவார்கள்.