ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவில் நயினார் கோவில் என்னும் தலத்தில் நாகநாதப் பெருமான் கோயில் அமைந்துள்ளது. அன்னை சவுந்தர்யநாயகி மிகுந்த வரப்பிரசாதி. முகத்தில் தோன்றும் பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் அகன்று முகப்பொலிவு பெற அன்னை சவுந்தர்ய நாயகியை வணங்கி, இக்கோயில் அபிஷேக தீர்த்தத்தை அருந்தவேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கோயில் உட்பிராகாரத்தில் உள்ள புஷ்கரணி தீர்த்தத்தை 24 முறை அருந்த நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.