யோக நிலையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை மதுராந்தகம் வட்டத்தில் உள்ள குமாரவாடி அழகேஸ்வர பெருமான் கோயிலில் தரிசிக்கலாம். எழுத்தாளர்களும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களும் இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டால், தங்கள் பணியில் மேலும் முன்னேற்றம் பெறலாம் என்பது நம்பிக்கை.