ஒரு முறை அஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணர், துரியோதனின் சித்தப்பா விதுரர் வீட்டில் சாப்பிட்டார். பின்னர் துரியோதனனை சந்திக்க வந்தார். “என் போன்ற அந்தஸ்து உள்ளவர் வீட்டில் சாப்பிடாமல் ஒரு ஏழை வீட்டில் சாப்பிட்டாயே. இதிலிருந்தே உன் அல்ப புத்தி தெரிகிறது” என்று துரியோதனன் திட்டினார். கிருஷ்ணர் சிரித்தபடி “துரியோதனா! யார் என்பது முக்கியமல்ல. அன்புதான் முக்கியம். எனக்கு நீ விரோதியும் இல்லை. ஆனால் என் பக்தர்களான பாண்டவர்களுக்கு விரோதி. ஆகவே எனக்கும் விரோதி. அதனால் உன் வீட்டில் சாப்பிடவில்லை,” என்றார். பக்தர்கள், நல்லவர்களின் வீடுகளில் மட்டுமே சாப்பிட வேண்டும்.