பதிவு செய்த நாள்
30
ஆக
2018
12:08
திருக்கழுக்குன்றம்: அமிஞ்சிகரை செங்கழனியம்மன் கோவிலில் இன்று, மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம், அமிஞ்சிகரை கிராமத்தில் பழமையான செங்கழனியம்மன் கோவில் உள்ளது. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் விழா, இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக விழாவை ஒட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, கோ பூஜையும், இரவு, 7:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, யாகபூர்த்தி, தீபாராதனை நடந்தது.