பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
சேலம்: சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், நேற்று கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடந்தது. ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவில் கும்பாபி ?ஷக விழா, கடந்த, 27ல், கணபதி யாகத்துடன் தொடங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை முடிந்து, பூர்ணாஹூதி செய்யப்பட்டு, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து, கோபுர கலசங்களுக்கு ஊற்றி, கும்பாபி?ஷகத்தை நடத்தி வைத்தனர். அப்போது, ஏராளமான பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி கோஷங்களை முழங்கினர். தொடர்ந்து, பரிவார தெய்வங்கள், சன்னதிகளுக்கு கும்பாபி?ஷகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர், வரசித்தி விநாயகர் கோவிலில், ஷூரடி சாய்பாபா; வாழப்பாடி அருகே, மன்னாயக்கன்பட்டி, மாரியம்மன்; ஏற்காடு டவுன், செல்வ விநாயகர் கோவில்களில் கும்பாபி?ஷகம் நடந்தது. மேலும், இடைப்பாடி, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கவுள்ளது. அதில், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
2ம் ஆண்டு...: அரியானூர் சந்திப்பிலுள்ள, மகா கணபதி கோவில் கும்பாபி?ஷகம், கடந்தாண்டு நடந்தது. அதன், இரண்டாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரித்து, யாக பூஜை நடந்தது. பின், பூஜையில் வைத்திருந்த புனிதநீரால், மூலவருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. கணபதி, வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார்.
தீர்த்தக்குட ஊர்வலம்: மேட்டூர், பி.என்.பட்டி, தொட்டில்பட்டியில், சக்திமாரியம்மன் கோவில் கும்பாபி ?ஷகம் நாளை நடக்கிறது. அதற்காக, நேற்று காலை, ஏராளமான பக்தர்கள், தொட்டில்பட்டி காவிரியாற்றிலிருந்து, குதிரை, யானை, பசுக்கள் முன்புறம் செல்ல, தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இடங்கணசாலை கிராமம், இ.காட்டூர், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சித்தேஸ்வரர் கோவிலிலிருந்து, பசு, யானை ஆகியவற்றுடன், திரளான பக்தர்கள், தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தை அடைந்தனர்.