பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
குமாரபாளையம்: குமாரபாளையளம், சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது. குமாரபாளையம் திருவள்ளுவர் நகர், நடராஜா நகர் அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் வளாகத்தில், சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று துவங்கியது. காலை, 7:00 மணிக்கு விஷ்வக்சேனா தீப பூஜை, சுதர்சன ஹோமம், மாலை, 6:00 மணியளவில் புண்யாக வாசனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நாளை காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.