திருப்பாலைக்குடி மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2018 01:08
உப்பூர்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே திருப்பாலைக்குடி காந்திநகர் மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா ஆக. 21 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு இளைஞர்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்து வந்தன. வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோயிலில் வைத்து பெண்கள் வழிபாடு செய்து பின்பு ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.