பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
நாமக்கல்: நாமக்கல்லில், ராகவேந்திர சுவாமிகளின், 347வது ஆராதனை, மஹோத்சவ விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல், ஸ்ரீசாய் தத்தா பிருந்தாவன் பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபத்தில், ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவனம் உள்ளது. நேற்று, சுவாமியின், 347 வது ஆராதனை மஹோற்சவம் நடந்தது. காலை, 9:00 முதல், 11:30 மணி வரை சிறப்பு அபி ?ஷகம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தி, 12:30 மணிக்கு அன்னதானம், மாலை, 6:30 மணிக்கு விஜயலட்சுமி வெங்கடஷே் குழுவினரின் பஜனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ சாய் ஹர்ஷா நான் பிராபிடபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.