பக்தரை நினைத்தால் பகவான் கிருஷ்ணரை நினைத்த பலன் கிடைக்குமா? கிடைக்கும் என்பதற்கு உதாரணம் தான் மகாராஜா அம்பரீசன். இவர் ஏழு கடல், ஏழு தீவுகள் கொண்ட பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்தவர். அஸ்வமேத யாகம் நடத்துவதே சிரமம். ஆனால், நூறு அஸ்வமேத யாகம் நடத்தி அதன் பலனை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தார். தன் கையில் இருந்த சக்கரத்தை பரிசாகக் கொடுத்தார் கிருஷ்ணர். இவரை மனதார நினைத்தால் வாழ்நாள் முழுவதும் உணவுக்கு குறைவிருக்காது.