பதிவு செய்த நாள்
05
செப்
2018
01:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை, சர்வோதயா நகர், ராஜன் நகர் விரிவு பகுதி, நவ துர்க்கை யம்மன் கோவிலில் நாளை, (செப்.,6ல்) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் நகராட்சி, ஓரிக்கை, சர்வோதயா நகர், ராஜன் நகர் விரிவு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், இப்பகுதியில், 25 லட்ச ரூபாய் செலவில், புதிதாக நவதுர்க்கையம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது.இன்று காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. கும்பாபிஷேக தினமான நாளை காலை, 5:30 மணிக்கு, கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 8:30 மணிக்கு கலச புறப்பாடும் நடக்கிறது.
காலை, 8:45 மணிக்கு, கோபுரம் மற்றும் நவ துர்க்கையம்மன் மஹா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காலை, 9:30 மணிக்கு மஹா அபிஷேகமும், 10:00 மணிக்கு மஹாதீபாராதனையும், அன்ன தானமும் நடை பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, அம்மன் பில்டர்ஸ் மற்றும் ஏ.டி., கன்ஸ்ட்ரக் ஷன் குடும்பத்தினர், காஞ்சிபுரம் ஓரிக்கை, சர்வோதயா நகர், ராஜன் நகர் விரிவு குடியிருப் போர் நலச்சங்கத்தினர் இணைந்து செய்து உள்ளனர்.