பதிவு செய்த நாள்
06
செப்
2018
11:09
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 2 முதல், கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று (செப்., 5ல்) காலை, பூஜை நடந்தது. பின், சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணர் அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர், தரிசனம் செய்தனர். வரும், 11 வரை, தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.