பதிவு செய்த நாள்
05
செப்
2018
01:09
சுங்குவார்சத்திரம்:பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி, தாதி ஜானகிஜி, சுங்குவார்சத்திரத்தில், ஏஞ்சல் ஹவுஸ்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில், பிரம்ம குமாரிகளின் சிறப்பு பயிற்சி மையம், 5 ஏக்கர் பரப்பில் உள்ளது.இங்கு, ஏஞ்சல் ஹவுஸ் என்ற பெயரில், ஐந்து மாடிக் கட்டடம் கட்டுவதற்கு, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா, நேற்று (செப்., 4ல்) காலை நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக, பிரம்ம குமாரிகள் இயக்கத்தின், தலைமை நிர்வாகியும், 103 வயதானவருமான, தாதி ஜானகிஜி பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.