கிரகங்களில் சனீஸ்வரரே ஒரு ராசியில் அதிகநாட்கள் தங்குவார். இவரால் ஏற்படும் தோஷம் நீங்க விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடலாம். விநாயகர் வணக்கத்தில் தொடங்கி ஆஞ்சநேயருக்கு மங்களம் சொல்லி முடிப்பது வழக்கம். இதையே பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்று சொல்வதுண்டு. இவ்விருவரும் இணைந்த கோலத்தை ஆத்யந்தப்பிரபு என்பர். இவரை வழிபட்டால் சனிதோஷத்தில் இருந்து விடுபடலாம்.