திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் தயாராகும் பசுமை விநாயகர் சிலைகள் மாணவர் களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இங்கு விநாயகர் சதுர்த்திக்காக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் களிமண், பேப்பர்கூழ் ஆகியவ ற்றால் தயாராகின்றன. இந்த ஊரை சேர்ந்த ராமலிங்கம் களிமண்ணில் விநாயகர் சிலைக ளுக்குள் செடி முருங்கை, கத்தரி, வெண்டை, துளசி விதைகளை வைத்து தயாரிக்கிறார்.
அவர் கூறியதாவது: களிமண்ணால் மட்டுமே சிலைகளை தயாரிக்கிறேன். சுற்றுச்சூழல், இயற்கை, மூலிகைகளை பாதுகாக்கும் வகையில் சிலைகள் தயாராகின்றன. இவற்றை விற்றாலும் இயற்கையை பாதுகாப்பதில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு சிலைகளை இலவசமாக வழங்குகிறேன். மாணவர்கள் அடையாள அட்டையை காட்டினால் சிலை வழங்கப்படும். சதுர்த்தி முடிந்தவுடன் சிலைகளை நீர்நிலை களில் கரைக்கிறோம். இதனால் அங்கு மண்மேவி விடும். என் சிலைகளை வீட்டிலுள்ள தொட்டியில் வைத்து தண்ணீர் ஊற்றினால் 2 நாட்களில் விதைகள் முளைத்து விடும் என்றார். தொடர்புக்கு 98949 25744.