கோவை, தொண்டாமுத்தூர் பழங்கால பாறை கீறல் ஓவியம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2018 12:09
தொண்டாமுத்தூர்: கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலைக்கிராமத்தில் உள்ள பாறை குகைக்குள், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை கீறல் ஓவியத்தை, தமிழக மரபுசாரா ஆர்வலர்கள் சங்கத்தினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழக மரபுசாரா ஆர்வலர்கள் சங்க உறுப்பினர் ஆனந்தன் கூறியதாவது: இந்த ஓவியம், மனித உருவம் கொண்டது. இதில், தலை,வட்ட மாகவும், உடல் முக்கோண வடிவமாகவும், கழுத்து நீளமாகவும் உள்ளது.பழங்கால மலைவாழ் மக்களால், உருவாக்கப் பட்டிருக்கலாம். இங்கு பல கீறல் ஓவியங்கள் இருந்துள்ளன. பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டதால் சிதைந்திருக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.