சாயல்குடி: மழை வேண்டி அம்மனுக்கு கறி சோறு படைத்து கிராமத்தில் வினோத வழிபாடு நடந்தது.சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி.சேதுராஜபுரம் கிராமத்தில் மழை வேண்டி அங்குள்ள அரியநாச்சி அம்மனுக்கு கறிசோறு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் நாட்டு விடைக்கோழி அடித்து குழம்பு வைத்தும், நாட்டுக்கோழி முட்டையை அவித்தும் கறி சோற்றை அம்மனுக்கு பிடித்த சிம்பலங்கொட்டு மேளத்துடன் சுமந்து வந்து ஊரின் வடபுறத்தில் உள்ள அரியநாச்சி அம்மனுக்கு வாழை இலையில் மொத்தமாக கொட்டி படையலிட்டனர். பின் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றியும், பெண்கள் கும்மியடித்தும் வழிபட்டனர்.